நானுஓயா ரதல்ல சந்தியிலிருந்து தலவாக்கலை வரை செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் நானுஓயா ரதல்ல சந்தியிலிருந்து தலவாக்கலை வரை செல்லும் கொங்கிரட் பாதை இன்று(5) வெள்ளிக்கிழமை உடைந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த பாதையினூடாக வங்கிஓயா, கல்கந்த, கிரேட்வெஸ்டன், ரதல்ல தோட்டம் உட்பட பலதோட்ட மக்களும் பாடசாலை மாணவர்களும் இந்த பாதையை பயன்படுத்திவரும் இந்த நிலையில் இந்த பாதை நேற்று இரவு சேதமடைந்ததால் பெரும் அசௌரியங்களுக்குள்ளாகியுள்ளார்கள்.

கடந்த வருடம் பெய்த கடும் மழையினால் இந்த பாதையில் இதே இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு தோட்ட நிர்வாகமும் தோட்ட மக்களும் ஒன்றிணைந்து பாதையின் அருகிலிருந்த தேயிலை செடிகளை அகற்றி மண் நிரப்பப்பட்டு பாதையை திருத்தினார்கள். மீண்டும் இப் பாதை அதே இடத்தில் நேற்று இரவு  சேதமடைந்ததால் இப் பிரதேச தோட்ட மக்கள் பாதிப்புள்ளாகியுள்ளார்கள்.

டி சந்ரு.