நானுஓயா வங்கிஓயாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

0
12

நானுஒயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட நானுஒயா வங்கிஓயா தோட்டத்தில் இன்று காலை மரம் இழுப்பதற்காக வந்திருந்த பூம் வண்டி சுமார் 30 அடி பல்லத்தில் குடை சாய்ந்து விபத்துக்கள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 43 வயதுடைய கினிகத்தனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ் விபத்துக்கான காரணம் ரதல்லையில் இருந்து வங்கிஓயா செல்லும் பாதை கடந்த 6 மாதத்திற்கு முன் காபட் இட ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அது தற்போது இடை நிறுத்தப்பட்டிருப்பதால் இவ் பாதையை பறித்து குன்றும் குழியுமாக போட்டு விட்டு சென்றதாலும் இப் பாதையில் முறையாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் இருந்து காரணத்தால் இவ் விபத்து ஏற்பட்டது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றன .

விபத்தில் உயிரிழந்தவரின் உடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும் விபத்து தொடர்பாகவும் நானுஒயா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here