நான்கு மாதங்களின் பின்னர் உலக முடிவு திறக்கப்பட்டது; சுற்றுலாப்பயணிகள் அதிகரிப்பு!

0
101

கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த சிறிய உலக முடிவினை மீண்டும் சுற்றுலா பயணிகள் செல்வதற்காக திறக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக இருந்து வந்த இந்த பகுதி கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

நுவரெலியா மாநகரசபை மற்றும் விவசாய திணைக்களத்தால் நடாத்தப்பட்ட சிறிய உலகமுடிவு நுவரெலியா-சீதாஎலிய நிர்வாக அலகு நிலத்துக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

மேற்படி பகுதிக்கு செல்லும் பாதை சீரற்று காணப்பட்டதால் இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை, தற்போது பாதை திருத்தப்பட்டு சபாரி வாதங்களும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன, இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here