வேறு யாரும் இல்லாத காரணத்தினால் தான் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றேன் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் மக்கள் துயரத்தில் இருந்த போது அவர்களுக்காக எழுந்து நிற்காததையும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
பேராசையின் காரணமாகவே இப்போது அதிகாரத்தைப் பெற முன்வந்துள்ளனர் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
கொஸ்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் தெரிவிக்கையில்;
“மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள். எங்களுக்கு வலி இருந்தது. வலி இருந்ததாலே நாங்கள் பொறுப்பெடுத்தோம்.. அவர்களுக்கு வலி இருக்கவில்லையா? அவர்கள் உங்கள் வலியைப் பார்க்கவில்லையா? குழந்தைகள் பாடசாலைகளுக்கு செல்லாததை அவர்கள் பார்க்கவில்லையா? அதற்கு பதில் சொல்லுங்கள்.. நான் இங்கே வரக் காரணம் மக்களின் வலி.. நான் ராஜபக்ஷர்களை பாதுகாக்க வந்தேனாம்.. அவர்களை நான் பாதுகாத்திருந்தால் அவர்களும் இந்த மேடையில் இருந்திருக்க வேண்டுமே? அன்று வலியில் இருந்த உங்களை கைவிட்டுச் சென்றோர் இன்று வருகிறார்கள் என்றால் ஏன்? அது தான் பேராசை..”