கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அனல் மின் நிலைய கேள்வி கோரல் விடயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான சட்ட மா அதிபரின் அனுமதி பாரிய நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்வரும் ஓரிரு தினங்களில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பேன் ஏசியா வங்கியின் தலைவர் நிமல் பெரேரா உட்பட இன்னும் பலர் விசாரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதில், நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான “ஹேலோ கோர்ப்” எனும் நிறுவனம் நேரடியாக சம்பந்தப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பொலிஸ் நிதி மோஷடிப் பிரிவு மேற்கொள்ளும் விசாரணைகளின் படி தேவைப்படின் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கும் முடியும் எனவும் சட்ட மா அதிபர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.