நாமலின் பிரச்சார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில் காயமடைந்த சிறுவனை தேடிச்சென்று நலம் விசாரித்த ஷிரந்தி

0
35

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுவன் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனை ஷிரந்தி ராஜபக்ஸ நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

கூட்ட அரங்கின் மீது சுமார் மூன்று கற்கள் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here