வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (18) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 11 ஆம் திகதி திங்கட்கிழமை FCID யினால் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
70 மில்லியன் பொது நிதி மோசடி தொடர்பில் அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
இன்று நாமலுக்காக பிணை மனு முன்வைக்கப்படவுள்ளதாக அவரது சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.