நாய்களுக்கு கருப்பு வெள்ளை பெயிண்ட் அடித்து பாண்டா கரடி என மக்களை ஏமாற்றிய பூங்கா.!

0
75

சீனாவின் தைசௌ உயிரியல் பூங்காவில் சௌ சௌ இன நாய்க்கு கருப்பு வேலை பெயிண்ட் அடித்து பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளனர்.ஆனால் இதற்காக நாங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“எங்கள் பூங்காவில் பாண்டா இல்லாததால் இப்படி செய்தோம் எனவும், நாம் முடிக்கு டை அடிப்பதுபோல்தான் இதுவும். இதனால் நாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை’ என பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு சீனாவில் உள்ள ஹாங்சோ உயிரியல் பூங்காவில் ஏஞ்சலா என்ற பெயர்கொண்ட மலேசிய சூரிய கரடி பார்ப்பதற்கு மனிதனை போல தோற்றமளித்ததால் பார்வையாளர்கள் அதை கரடி வேஷம் போட்ட மனிதன் என்று தவறாக புரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here