நாளைய மலையகத்தை நோக்கி பல்துறைகளைச் சேர்ந்த 100 பேருக்கு ஹட்டனில் கௌரவிப்பு.

0
78

நாளைய மலையகத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் மலையக மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 பேரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 31.03.2024 ஹட்டன் சிறுவர்பூங்காவுக்கு அருகாமையிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதனை நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த இறுநூறு ஆண்டு காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

இம் மாற்றங்கள் ஏற்படுவது காரணமாக இருந்த படைப்;பாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள், அறிவிப்பாளர்கள்,சமூக சேவையாளர்கள் மற்றும் சர்வதேச அளவில் சாதனைபுரிந்த சாதனையாளர்கள் என பலரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் எழுத்தாளர் மு.சிவலிங்கம், எழுத்தாளரும் இலங்கை வெளியீட்டு திணைக்களத்தின் உதவி ஆணையாளரும் கவிஞருமான சு.முரளிதரன், மொழிவரதன் , ஊடகவியலாளர் க.சுந்தரலிங்கம் , கல்வியலாளர்கள், தொழிலதிபர் பத்மநாதன் உட்பட பலர் இதன்போது நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மலையக மக்கள் சந்தியின் தலைவர் செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள், அறிவிப்பாளர்கள்,சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்தும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தூரன் கருத்து தெரிவிக்கையில் மலையக வரலாற்றில் எழுத்தாளர், ஊடகவியலாளர்கள், கவிஞர்கள் என பலதுறை சார்ந்தவர்களை ஒரேமேடையில் கௌரவிப்பது இதே முதல்தடைவ இதற்கு காரணம் மலையகத்தின் 200 வருடகால வளர்ச்சினை பதிவிட்டவர்களும் அதை உலகறிய செய்தவர்களும் இவர்களே ஆனால் இவர்களுக்கென்று உரிய அங்கிகாரம் சரியான கௌரவம் கிடைப்பதில்லை இவர்கள் தங்களுடைய துறையினை செய்வதற்கு எந்தளவு கஸ்டப்படுகிறார்கள் என்பது அவர்களுடன் இருந்தால்தான் தெரியும். எனவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யும்போது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அழைப்பு விடுத்தால் இவர்கள் வருவார்களா என்று அழைத்தவர்களில் பெரும்பாலானோர் வருகைதந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளிக்கிறது என தெரிவித்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here