நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா கார்லிபேக் தமிழ் வித்தியாலயத்தின் வருடார்ந்த இல்ல விளையாட்டு போட்டிகள் 20.2.2018 செவ்வாய்கிழமை பிற்பகல் 1 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் அதிதிகளாக நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர் எம்.ஜி.அமரசிறி பியதாஸ, நுவரெலியா கல்வி வலயத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளர்கள் மோகன்ராஜ் மற்றும் லசந்த அபேரட்ண, நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஹரிச்சந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளதோடு இந்நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்பதாக பாடசாலையின் அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் அழைப்பிதழ் விடுத்துள்ளார்.
தலவாக்கலை பி.கேதீஸ்