நாளை நள்ளிரவு 12 மணி முதல் 24 மணிநேர ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் அழைப்பாளர் எஸ்.பி.விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக எதிர்வரும் 6ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.