நாளை முதல் சம்பள உயர்வைகோரி அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள புகையிரத ஊழியர்கள்!!

0
116

சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு தெரிவித்துள்ளது.

நாளை (29) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என குறித்த குழு தலைவர் பீ.சம்பத் ராஜித தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தத்தில் 12,000 ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here