நாவலபிட்டி தொலஸ்பாகே வீதியில் இருந்த குடியிருப்பு ஒன்றின் மீது பலாமரமும் தென்னை மரமும் முறிந்து விழுந்ததில் குடியிருப்பு ஒன்று சேதம்.நாவலபிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தொலஸ்பாகே வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது பலா மரம் ஒன்றும் தென்னை மரம் ஒன்றும் முறிந்து விழுந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நாலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 29.05.2018 இரவு வீசிய பலத்த காற்றினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
மரம் முறிந்து விழும் சந்தர்பத்தில் வீட்டில் எவரும் இருக்கவில்லையென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)