நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாலப்பிடிய கண்டி பிரதான வீதியில் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக நாலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்
நாலப்பிட்டி பல்லேகல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஜயசேகர முதியன்சலாகே அமில என்ற இளைஞனே இவ்வாறு பலியனார்.
அட்டனிலிருந்து கண்டி நோக்கிச்சென்ற தனியார் பஸ்ஸுடன் நாவலப்பிட்டி பல்லேகல பகுதியிலிருந்து நாலப்பிட்டி நோக்கி வந்த மோட்டார் சைக்கிலுமே 05.06.2018 காலை 8.45 மணியளவில் நாவலப்பிட்டிய கொந்தென்னாவ ரயில் கடவைக்கருகில் விபத்துக்குள்ளானது.
முந்திச்செல்ல பொருத்தமற்ற இடத்தில் லொறியொன்றை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முந்திச்செல்ல முற்பட்ட போதே வலுக்கிச்சென்று எதிரே வந்த பஸ்ஸுல் மோதுண்டுள்ளதாக தெரிவித்த நாவலப்பிட்டி பொலிஸார் சடலம் நாவலபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன், எஸ். சதீஸ்