நாவலப்பிட்டி பஸ் விபத்தில் காயமுற்ற மேரிவில தோட்டத்தை சேர்ந்தவர் மரணித்துள்ளார்!

0
129

நேற்று நாவலப்பிட்டியவிலிருந்து தொலோஸ்பாக நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ், கோணவலபத்தன 5ஆம் மைல்கல் பிரதேசத்துக்கு அருகில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ,தொலஸ்பாகே, மேரிவில தோட்டத்தைச் சேர்ந்த கருப்பையா தங்கராஜா (வயது 54) என்பவர், மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் அதில் கர்ப்பிணி பெண்கள் மாணவர்கள் என உள்ளடங்கியிருந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இருவர் மரணித்துள்ளனர் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here