“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெறும்.” – என்று நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நீர் வழங்கள் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சின் பிரத்தியேக செயலாளருமான ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.
பொகவந்தலாவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து வீடமைப்பு திட்டங்களும் கட்சி பேதமின்றி முன்னெடுக்கப்படும். எவ்வித அரசியல் தலையீடும் இருக்காது.
சம்பள நிர்ணய சபைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் இரு தடவைகள் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை.
இந்நிலையிலேயே நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அதேபோல் அரசாங்கம் கூரியவாறு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபாய் நிச்சயமாக கிடைக்கும்” – என்றார்.