நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து: நாளை ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்

0
218

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, மெளன்ட் மகட்டரேயில் நாளை காலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியுடன் தொடங்கவுள்ளது.

சூறாவளி காரணமாக இப்போட்டிக்கான தயார்ப்படுத்தல்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், முதல் நாளில் மழை இடையூறுகள் ஏற்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக் குழாமிலிருந்து கைல் ஜேமிஸனும், மற் ஹென்றியும் விலகியுள்ள நிலையில், இவர்களுக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி, ஸ்கொட் குக்லஜின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் டிம் செளதி, நீல் வக்னரோடு பிளையர் டிக்னர் அறிமுகத்தை மேற்கொள்ளும் வாய்ப்புக் காணப்பட்டாலும், துடுப்பாட்டம் காரணமாக குக்லஜினுக்கும் வாய்ப்புகள் காணப்படுகிறன.

அநேகமான சுழற்பந்துவீச்சை மிஷெல் பிறேவெல் பார்த்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் ஜேம்ஸ் அன்டர்சன், ஒலி றொபின்ஸனோடு ஸ்டூவர்ட் ப்ரோட் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஒலி ஸ்டோனுக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here