லயன் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் சேதம்- டிக்கோயாவில் சம்பவம்!!

0
222

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் 26.04.2018 அன்று விடியற்காலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 24 வீடுகள் கொண்ட லய தொடர் குடியிருப்பில் இடைக்கிடையே 5 வீடுகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, லய தொடர் குடியிருப்பில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

விடியற்காலை 5 மணியளவில் நில அதிர்வு உணர்ப்பட்டதாகவும், இதன்பின்பே வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரின் மீது சுவர்கள் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிவானந்தன் வயது 40 என தெரியவந்துள்ளது.

அதேவேளையில் பாதிக்குப்புக்குள்ளாகிய 5 வீடுகளில் வசிக்கும் 20 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர் என மேலும் தெரியவந்துள்ளது.

03 04 05 09 13 DSC02442

இந்த நில அதிர்வு மற்றும் வெடிப்பு சம்பவம் என்பன தீடிரென ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here