இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களுடன் இரண்டு இந்திய கப்பல்கள் இலங்கை வருகின்றன.
இந்த கப்பல்களில் உலர் உணவுப்பொருட்கள், மருந்துவகைகள், தற்காலிக கூடாரங்கள் என அத்தியாவசிய பொருட்களுடன் இலங்கைக்கு புறப்பட்டுள்ளதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதற்கட்ட உதவியாகவே இது வருவதாகவும் மேலதிக உதவிகளை வழங்க ஆலோசனை நடைபெறுவதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.