நீதிபதி இளஞ்செழியன் மீது தாக்குதல்; அமைச்சர் மனோகனேசன் கண்டனம்!

0
140

யாழ்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தனது பாதுகாவளருடன் பயணித்துக் கொண்டிருந்த பொழுது இனம் தெரியாதவர்களினால் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளாகியமைக்கு அமைச்சர் மனோ கணேசன் தனது கண்டனத்தை ஊடயங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இன்று நாட்டில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் யாழ்ப்பாணத்தில் நீதிதுறை சார்ந்த ஒருவருக்கு நீதிக்கே சவால் விடும் வகையில் தாக்குதல் நடாத்தியமையை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த தாக்குதல் காட்டு மிராண்டிதனமானது¸ பண்பற்றது¸ முறையற்றது¸ இந்த ஆயத தாக்குதலின் பின்னால் பயிற்சி பெற்ற ஆயத குழுவென்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு சூழலாக இருக்கின்றது.

உண்மையிலேயே வடக்கிலே வண்முறை செயற்பாடுகள் இல்லை ஓய்ந்து விட்டது என்று சொல்லும் போது இல்லை இல்லை இன்னும் அங்து இருகின்றது என்று சொல்லி அரசியல் செய்ய விரும்பும் சிலரின் செயற்பாடாக கருதுகின்றேன். தென்னிலங்கை பேரினவாதிகளி இது ஒரு வெறுமனமே மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஒரு சூழலை தந்திருக்கும் என நினைக்கின்றேன். இதை நினைத்து கவலை அடைகின்றேன். உண்மையிலேயே அது மட்டுமல்ல நிதிபதி இளஞ்செழியன் அவர்கள் கடுமையான¸ காத்திரமான பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். மிகவும் சர்ச்கைகுறிய வழக்குகளை பொருபேற்று செயற்படுத்தி வருகின்றார் அதை கண்காணித்தும் வருகின்றார். இந் நிலையில் அவர் மீதான தாக்துதல் வடக்கிலே சட்டம் ஒழுங்குக்கு இடப்பட்டு;ள்ள சாவாலாக கருதுகின்றேன் இது தொடரிபாக பொலிஸதுறை கடுமையாக செயற்பட பணிப்புறை வழங்கபட்டு;ள்ளது. கிடைத்த செய்தியின் அடிப்படையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்துபட்டுள்ளனர். இவர்களுக்கான வழக்குகள் நடைமுறைபடுத்தபட்டு சட்ட விரோதமான செயற்பாடுகளையும் வண்முறைகளையும் இல்லாதொழிக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் வழியுருத்துகின்றேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here