பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவரது பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அமைச்சர் விஜயதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக விஜயதாச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் அவர் அமைச்சரவைப் பொறுப்புக்களை வகிக்கத் தகுதியற்றவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய அவர் வகிக்கும் அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் அவரை நீக்குமாறு ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.