நில்வலா கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த நால்வரில் மற்றுமொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில், நில்வலா கங்கையில் நீராடச் சென்ற நால்வர் நேற்று மாலை காணாமல் போயிருந்தனர்.இந்த நிலையில், அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு ஒருவரிக் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் இன்று காலை மற்றுமொருவரிக் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை ஐந்து பேர் குளிக்கச் சென்ற நிலையில், அவர்கள் அனைவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து, பிரதேச மக்களின் உதவியோடு நேற்று ஒருவர் மீட்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில், ஏனைய இருவரையும் பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.