நீரில் மூழ்கி சிறுவன் ஒருவர் பலி_ நாவலப்பிட்டியில் சோகம்

0
28

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பானபொக்க, கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவன் மேலும் நான்கு நண்பர்களுடன் நீராடும்போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது நீரில் மூழ்கிய மேலும் இரண்டு சிறுவர்கள் நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்,
ஏனைய இரண்டு பேருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

இதேவேளை, மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 7ஆம் கால்வாயில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
47 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிர்காக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் 51142 சுசந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 91046 தசுன் ஆகியோர், பாணந்துறை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த மக்கள் குழுவில் நீரில் மூழ்கிய பெண்ணொருவர் மற்றும் இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றியுள்ளனர்.

15 வயதான இரண்டு பிள்ளைகளும், 40 வயதான பெண்ணொருவருமே இந்த அனர்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here