சீரற்ற காலநிலை காரணமாக மின்தடை ஏற்பட்டிருப்பின் அது தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மின் தடை தொடர்பில் 1987, 1910 மற்றும் 1901 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை கால நிலை காரணமாக 3 இலட்சத்து 36 ஆயிரம் பேருக்கு மின்சாரம் பெற்றுக்கொடுப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் பிரதான நீரேந்து நிலைகளில் மழைக்கு முன்னர் 27 வீதமாக இருந்த நீர்மட்டம் தற்போது 33 வீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் அமைச்சு, சற்றுமுன் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.