நீர் கட்டண அதிகரிப்பு : சமுர்த்தி பெறுவோருக்கு சலுகை

0
114

நூற்றுக்கு 20 வீதமான வசதி படைத்தோரிடமிருந்தே நீர்க் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்
நாட்டின் சமுர்த்தி உதவி பெறுவோர் மற்றும் அரசாங்கத்தின் நலன் புரி திட்டங்களுக்கு உட்பட்டோருக்கு, நீர் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான விசேட பேச்சு வார்த்தையொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிதியமைச்சில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, நூற்றுக்கு 20 வீதமான வசதி படைத்தோரிடமிருந்தே நீர்க் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (09) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்தாகவும் தற்போதைய நீர் கட்டண அளவீடுகளின்படி மாதாந்தம் 425 மில்லியன் ரூபா நட்டத்தை வருடாந்தம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்தளவு பாரிய நிதி இருக்குமானால் பல்வேறு கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கும் மலையக மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுக்க உபயோகப்படுத்த முடியும் என்ற ஒரு கருத்தையும் அமைச்சர் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here