இயற்கையாகவே கிடைக்கும் சில உணவுகளை மனிதர்கள் தவிர்ப்பது வழமை, ஆனால் அந்த உணவுகளில் தான் ஏராளமான பலன்கள் உண்டு.
அதேபோல் நுங்கு சாப்பிடுவதால் எமக்கு ஏராளமான மருத்துவ நலன்கள் கிடைக்கிறது.
நுங்கு சாப்பிடுவதால் எமக்கு கிடைக்கும் மருத்துவ நலன்கள் என்னென்ன என்பதை இதில் பார்க்கலாம்.நுங்கு சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு என்பவற்றிற்கு நல்ல மருந்தாக அமைகின்றது.
நுங்கு எமது உடலில் உள்ள சூட்டைக் குறைத்து குளிர்ச்சியாக்கிறது.
குடல் புண்ணை குணப்படுத்தும் ஆற்றலும், கோடை காலத்தில் உடலில் கொப்பளம் வராமல் தடுக்கும் மருத்துவ இயல்பும் இந்த நுங்கிற்கு உண்டு.
நுங்கினுடைய நீரை உடலில் தடவினால் வியர்க்குரு மறைவதோடு, நுங்கு அதிகம் சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து மேலும் அதிகரிக்கும்.