உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு பிறகு நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் தலவாக்கலை நுவரெலியா போன்ற பிரதேசங்களுக்கு பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளதாக ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரனில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று ஹட்டனில் ன.ம.ற கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய போதே பிரதமர் ரனில்விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதன் போது மேலும் உரையாற்றிய பிரதமர் நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒன்றினைந்து ஒரு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தோம், அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை தெரிவுசெய்தோம் அதேபோல் இன்று நாங்கள் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஒன்றாக இணைத்துள்ளோம் .
இந்த உள்ளுராட்சி தேர்தல் என்பது அரசாங்கத்தை மாற்றுவதற்கு அல்ல அரசாங்காத்தை மாற்ற முடியும் பாராளுமன்றத்திற்கு மாத்திரம் எனவே இந்த அரசாங்கம் என்பது மாறாது இந்த தேர்தலானது நாகரசபையிலம் பிரதேச சபையிலம் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் அது மட்டும் அல்ல நகரசபை மற்றும் பிரதேசசபைகளை யாருக்கு ஒழுக்கமான முறையில் வழிநடத்த முடியும் என்பதற்க்காகவே இந்த உள்ளுராட்சிசபை தேர்தல் என்பதனை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என குறிப்பிட்டார்.
எங்கள் அரசாங்கத்தின் ஊடாக இன்று ஆறு பிரதேசசபைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது, நான் ஒன்று கேட்கிறேன் இதற்கு முன்பு அரசியல் உள்ளவர்கள் என்ன செய்தார்கள். ஏன் இவர்களால் புதிய பிரதேசசபைகளை உருவாக்க முடியவில்லை? ஆனால் தற்பொழுது புதிய பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டுள்ளன இது தான் நாட்டின் அபிவிருத்தி என தெரிவித்தார்.
நுவரெலியா மவாட்டத்தில் பிரதேசசபைகள் அதிகரிக்கபட வேண்டுமென அமைச்சர் திகாம்பரம் என்னிடம் கூறினார் அது பற்றி நாங்கள் கல்நதுரையபடினோம் உடனடியாக நாங்கள தீர்மானத்தினை கொண்டுவந்தோம் எனவம் குறிப்பிட்டார்.
தற்பொழுது உறுவாக்கபட்டுள்ள பிரதேசசபைகளை வைத்து கொண்டு மக்களுக்கு பாரிய சேவைகளை ஆற்றமுடியும் அந்தவகையில் அட்டன் நகரத்தினை புதிய நகரமாக மாற்றி காட்டுகிறோம். நுவரெலியா நகரத்தில் மேலும் பல அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளோம் தலவாகலை நகரை மத்திய நகரமாக மாற்றயிரப்பதாகவும் தெரிவித்தார்.
உங்களுக்கு வேண்டும் அபிவிருத்தி அதனை நான் செய்த தருகிறோம் பிரதேசசபை நகரசபைக்கு எதற்கு வாக்களிக்கின்றோம் இது ஒரு பதிய தேர்தல் முறை இந்த முறையில் 100க்கு 25வீதம் பெண்ங்களக்கு தேர்தலில்போட்டியிட வாய்ப்பு வழங்கபட்டுள்ளது. இந்த முறையினை கொண்டு வந்தவர்கள் நாங்கள் எங்கள் அரசாங்கம் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு புதிய சட்டத்தினை கொண்டு வந்தது இந்த நாட்டில் உள்ள பெண்ங்கள் 100க்க 25வீதம் உள்ளுராட்சி சபை தேர்தலில் உள்வாங்கவேண்டுமென்பதற்க்காக.
நாங்கள் புதிய பிரதேசசபைகளை உறுவாக்கி பதிய தேர்தல் முறைகலை கொண்டு வந்துள்ளளோம் இதற்கு பிறகாவது பெண்ங்கள் 100க்க 45விதமாவது உள்ளுராட்சி சபை தேர்தலில் உள்வாங்கபட வேணடும்
நஸ்டத்தில் இருந்த நாட்டை நாங்கள் ரொம்பவும் கஸ்டபட்டு மீட்டெடுத்தோம் வெளி நாடுகளில் கடன் பெற்று பெற்று வாங்கிய கடனை கட்டமுடியாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி நாட்டை வழிநடத்த முடியவிலலை என்று சென்றார்
ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் என்ன இருந்தது அதற்க்கு கப்பல் கொண்டுவந்தது எங்கள் அரசாங்கம் மத்தள விமானநிலையமும் அதே போல்தான் ஆனால் நாங்கள் பயமில்லாமல் நாட்டை பொறுப்பேற்றோம் ஆனால் வருகின்ற இலாபத்தில் முன்னாள் ஜனாதிபதி வாங்கிய கடன்களை நாங்கள் செலுத்தி வருகின்றோம் என்றார் .
அருகில் உள்ள பாடசாலை அழகான பாடசாலை என்ற வேலைதிட்டத்தின் கீழ் நாங்கள் பதிய கட்டிடங்களை அமைத்து வருகிறோம் அரச உத்தியோகத்தர்களுக்கு வேதனத்தை அதிகத்து இருக்கிறோம், என்னையின் விலையை குறைத்து இருக்கிறோம், புதிய வீடுகளை அமைத்து மக்களுக்கு வழங்கி வருகிறோம், நவீன முறையிலான வியாபார நிலையங்கள் போன்ற வேலைதிட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
எதிர்வரும் ஐந்து வருடங்களில் இந்த நாட்டில் மட்டும் அல்ல நுவரெலியா மாவட்டத்திலும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள இரக்கிறோம் யாரையும் நாங்கள் பழிவாங்கவில்லை, யாரையும் விட்டு நாங்கள் ஓடிபோகவில்லை நாங்கள் பாரிய அபிவிருத்திகளை மாத்திரம் மேற்கொண்டுவருதாகவும் குறிப்பிட்டார்.
ஆகையால் தான் அமைச்சர் திகாம்பரத்திற்கு தோட்ட உட்கட்டமைப்ப என்ற அமைச்சி பதவி வழங்கட்டுள்ளது தோட்ட புறங்களில் தனிவீடுக்ள கட்டபட்டு கானிஉறுதி பத்திரம் வழங்கபடவேண்டுமென 1993,1994ம் ஆண்டு காலபகுதியில் யோசனைகலை முன்வைத்தோம் நாங்கள் அரசாங்கத்தில் இருந்த விடுபட்டோம் ஆனால் தற்போது அந்த வாய்பு எமக்கு கிரடைத்துள்ளது
அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு வருகை தந்தார் இதற்கு முற்பட்ட காலபகுதியில் யாராவது பிரதமர் ஒருவரை அழைத்து வந்தார்களா இது தான் அபிவிருத்தி என்றார்
பொகவந்தலாவ நிருபர்
எஸ்.சதீஸ்