நுவரெலியாவிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் விசேட சோதனைக்கு

0
30

நுவரெலியா பொலிஸ் எல்லைக்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யும் நடவடிக்கைகள் இந்த நாட்களிலும் தொடரும் என நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருள் புழக்கத்தை குறைக்கும் வகையில் இது அமைந்துள்ளது.மாகாணம் முழுவதும் அமுல்படுத்தப்படும் ‘யுக்திய’ நடவடிக்கைக்கு சமாந்தரமாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

அதன்படி நுவரெலியா பொலிஸாரும் 3ம் லயன் படைப்பிரிவின் உத்தியோகத்தர்களும் நுவரெலியா பொலிஸாருடன் இணைந்து நுவரெலியா நகர எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் இரவு பகலாக சோதனையிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here