நுவரெலியா நகரில் உள்ள இ.தொ.கா கா. அலுவலகம் இனந் தெரியாதவா்களால் தாக்குதல் மேற்கொள்ளபட்டு சேதமாக்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸாா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் 23.12.2017.சனிகிழமை இரவு இந்த சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அலுவலகத்தில் உள்ள தளபாடங்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ள கதவு ஐன்னல் என்பன உடைக்கபட்டிருப்பதாக பொலிஸாாின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடா்பில் இதுவரையில் எவரும் கைது செய்யபடவில்லையெனவும் இது தொடா்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸாா் மேலதிக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் – தலவாக்கலை நிருபர் கேதீஸ்.