நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் சேவல் மற்றும் வெத்திலை சின்னங்களில் போட்டியிடவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் வேட்புமனுவை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் (20) அன்று மாலை 2.45 மணியளவில் தாக்கல் செய்தது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான் தலமையில் வேட்புமனு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமாரவிடம் கையளித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா அம்பகமுவ நோர்வூட், கொட்டக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா , ஆகிய பிரதேச சபைகளும் ,
ஹட்டன்_ டிக்கோயா, தலவாக்கலை -லிந்துல , நுவரெலியா மாநகரசபை ஆகியவற்றில் சேவல் சின்னத்திலும் ,
கொத்மலை ஹங்குராங்கெத்த வலப்பனை ஆகிய பிரதேசசபைகளில் இ.தொ.காவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபுடன் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனு கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ம.ரமேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான கனபதி கணகராஜ், பிலிப்குமார் ,பழனி சக்திவேல், ஆகியோருடன் ஆர்.எம்.பி. ரத்நாயக்கா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பி.ராஜதுரை மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை தலவாக்கலை லிந்துலை நகரசபை மற்றும் நுவரெலியா மாநகரசபை ஆகியவற்றுக்கு ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டி.சந்ரு.