மலையக பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றதன் பின்பும் அதற்கு முன்பும் அவர்களது ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஊழியர் சேமலாப நிதி போன்றவற்றை பெற்று தருவதற்கு கூறி மலையகத்தில் தற்போது பல தரகர்கள் செயற்பட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் அறியாமையை ஆயுதமாக பயன்படுத்தி இவர்களை ஏமாற்றி பெருந்தொகையான பணத்தை தரகர்கள் பெற்றுக் கொள்ளும் அதே நேரம் சிலருக்கு இவர்களால் அரவே ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஊழியர் சேமலாப நிதி கிடைக்காத நிலையம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி பணங்களை பெற்றுக் கொள்வதற்கு கொழும்புக்கு செல்ல வேண்டியுள்ளது. தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கபட்டும் உள்ளது இதனால் தொழிலார்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மலையத்தில் நுவரெலியாவில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின்; பிராந்திய கிளை காரியாலயம் திறந்து வைத்து இருப்பது நல்ல காரியம். அதே வேலை இதனை பெற்று தருவதாக கூறி தற்போது மலையகத்தில் செயற்பட்டு வரும் தரகர்களுக்கு இது ஒரு ஆப்பாக இருக்கும் என்று கூறிகின்றார் மலைய மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.
நுவரெலியாவில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் பிராந்திய கிளை காரியாலம் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார். இந் நிகழ்வில் அபிவிருத்தி கடமை பொருப்புக்கள் அமைச்சின் செயலாளர் திருமதி எல். டீ. சேனநாயக்க ஊழியர் நம்பிக்கை பொருப்பு நிதியத்தின் தவிசாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த மடிஹஹேவா உட்பட மலையக தொழிற்கங்க பிரதிநிதிகள் வங்கி முகாமையாளர்கள், தோட்ட முகாமையாளர்கள். ஊழியர் நம்பிக்கை பொருப்பு நிதியத்தின் உயர் அதிகாரிகள் பயனாளிகள்; ஆகியோர் கலந்துக் கொண்டனர் .
புதிதாக நுவரெலியாவில் திறந்து இருக்கும் காரியாலயத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேரடியாக சென்று விண்ணபித்து தங்களது பணங்களை தாங்களே பெற்றுக் கொள்ள முடியும். தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம் தரகர்களை நம்பி ஏமாறும் தேவையும் இல்லை.
தமிழ் மொழிமூலம் ழூலம் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும.; இந் நிகழ்வில் கல்வி சுகாதாரம் வீடமைப்பு என்பற்றுக்கான நலன்புரி வசதிகள் பயனாளிகளுக்கு காசோலைகளாக வழங்கபட்டன.
இந்த காரியாலயம் இல.164 கண்டி விதியில் அமைந்துள்ளது தொலைபேசி இலக்கங்கள் 0522224457ää 0522224475
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. இந்த நிதியம் இலங்கையில் செயற்பட்டுவரும் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிதியமாகும். 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் கிகதியிலிருந்து செயற்பட்டுவரும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை ஓய்வூதியத்திற்கு உரிமைப் பெறாத அரசாங்கத் துறைமாற்றும் தனியார் துறையில் சேவையாற்றும் பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக செயற்பட்டு வருகின்றது.
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தவராகிய தாங்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள மீதியைப் பெற்றுக்கொள்ளல். ஊழியர் ஒருவர் தனது சேவையை நிறைவு செய்யும் போது அவரது கணக்கில் அன்றைய தினம் வரவாக உள்ள வட்டி மற்றும் பங்கு லாபத்துடன் கூடிய மீதியை மீண்டும் பெற்றுக் கொள்ளமுடியும். அதற்காக ஊ.சே.நி போன்று 55 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெரும்வரையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.
நலன்புரி வசதிகள் (சுகாதாரம், கல்வி, வீடமைப்பு) நிதியத்தின் உயிர்ப்புள்ள அங்கத்தவர்களுக்கு பின்வரும் 10 நலன்புரி திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்படுகின்ற போது அதற்கு அங்கத்தவர்களின் தனிப்பட்ட கணக்கில் மீதியிலிருந்தோ அல்லது வேறு எந்த வித குறிப்புக்களோ இன்றி அந்த நலன்களை வழங்குவது இந்த நிதியத்தின் விசேட பன்பாகும்.
பா.திருஞானம்