நுவரெலியாவில் எரிவாயு சிலிண்டருக்கு தொடரும் தட்டுப்பாடு – வரிசை கட்டும் மக்கள்!

0
103

நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர்.

அதிகாலை ஐந்து மணி முதல் வரிசையில் காத்திருந்தும் கூட ஒரு சிலரால் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

அத்துடன், ஒரு சிலர் தமது பிரதேசங்களைத் தவிர்த்து மிக நீண்ட தூரம் பயணம் செய்தும் அதிக செலவு செய்தும் எரிவாயு கொள்கலன்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இதேவேளை நுவரெலியா மற்றும் நானுஒயாவில் சில உணவகங்கள் எரிவாயு கொள்கலன்கள் இல்லாததன் காரணத்தினால் மூடப்பட்டுள்ளது

(நுகர்வோர் ஒருவரின் கருத்து )

சகல விடயங்களுக்கும் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.

இரண்டு மூன்று நாட்களாக வந்துசெல்கின்றோம். ஆனால் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப உள்ளது.

எரிவாயு சிலிண்டர் இல்லை, உண்பதற்கு உணவு இல்லை. ஒரு பக்கம் எரிபொருளுக்கான நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

நீண்டவரிசையில் காத்திருந்தும் எரிவாயு சிலிண்டர் கிடைக்குமா என்பது சந்தேகமே என நுகர்வோர் தெரிவித்தனர்.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here