ஐஸ் கட்டியில் சிற்பம் செதுக்கும் போட்டியில் நுவரெலியா அரலீய கிரீன் சிட்டி ஹோட்டல் சமையல் கலைஞர்கள் முதலாமிடத்தை பெற்றுள்ளனர்.இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 18.04.2018 நுவரெலியா கிரேன் ஹோட்டலில் சிற்பம் செதுக்கும் போட்டி இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியிலுள்ள சிறந்த சமையல் கலைஞர்கள் பங்குகொண்ட மேற்படி போட்டியில் முதலாம் இடத்தை நுவரெலியா அரலிய கிரீன் சிட்டி ஹோட்டல் சமையல் கலைஞர்களான ஜனக மற்றும் பந்து ஆகியோர் முதலாம் இடத்தையும் அம்பாந்தோட்டை ஹோட்டல் கலைஞரான எல்.எய்ச் அகேஷ் டி சில்வா இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டியின் சிறப்பு அதிதியாக நுவரெலியா மாநகரசபையின் நகர பிதா சந்தனலால் கருனாதிலக உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்