வளப் பற்றாக்குறையிலும் நுவரெலியாவில் சிறந்த பாடசாலையாக திகழும் சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி!!

0
154

வளங்கள் இல்லாவிட்டாலும் இருக்கின்ற வளங்களை கொண்டு மாணவர்கள் மத்தியில் இருக்கின்ற திறமைகளை வெளி உலகத்திற்கு எடுத்துகாட்டுவதில் அதிபர் ஆசிரியர்கள் உணர்வூடன் செயல்பட்டு சாதனைக்குமேல் சாதனை படைக்கும் நுவரெலியா கல்வி வலயத்திற்குடபட்ட டயகம இல 02 சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி இப்பிரதேசத்தில் ஒரு தாய் பாடசாலையாக திகழும் இப்பாடசாலையானது தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்களில் 110 மாணவர்களைக் கொண்டு 1959-09-08ம காலப்பகுதியில் அதிபராக இருந்த எஸ்.தியாகராசா தலைமையில் எவ்வித அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் திருமதி. கே.ஜெயலெட்சுமிஇ சி.சுப்பிரமணியம் எஸ்.சுப்பிரமணியம் . டி.பி. தனபாலன் மற்றும்  ஏ.மனோகரன் ஆகியோர் அதிபர்களாக கடமையாற்றியுள்ளதோடு அவர்களால் சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
2003ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அதிபர் எஸ். நடராஜா தலைமையில் இயங்கிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க 1994-11-12 ம் திகதி வரையில் இருந்த தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்கள் இக்காலப்பகுதியில் 11ம் தரத்திற்கு உயர்த்தப்பட்டது.

மேலும் 1997ம் ஆண்டு முதன் முதலாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றியதுடன் 2006ம் ஆண்டு க.பொ.த. உயர் தரத்தில் கலைப்பிரிவூம்இ 2016ம் ஆண்டு வர்த்தக பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. 2008ம் ஆண்டு உயர் தர கலைப்பிரிவில் முதன் முறையாக தோற்றி தமிழ்இ அரசறிவியல் பாடங்களின் 100 வீதம் சித்தியடைந்துள்ளதுடன்இ புவியியல் பாடத்தில் 94 வீதம் சித்தி பெற்றதன் காரணமாக பாடசாலை வளர்ச்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டது.

2009ம் ஆண்டு செல்வி. பி. ராஜசுபானி தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கும்இ செல்வி. ஏ. ஜீவராணி ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கும் தெரிவாகியூள்ளனர்.2010ம் ஆண்டு டி.நிசாந்தினி மாவட்ட ரீதியாக 4ம் இடத்தைப் பெற்று கொழும்பு பல்கலைகழக சட்ட பீடத்திற்கு தெரிவூ செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இன்னும் பலர் அடுத்தடுத்தக் காலப்பகுதியில் பல்கலைக்கழகத்திற்கும்இ கல்வியியற் கல்லூரிகளுக்கும் தெரிவூ செய்யப்பட்டுஇ இதே பாடசாலைக்கு ஆசிரியர்களாக வருகைத் தந்தமை மேலும் இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது.பாடரீதியான பல சாதனைகளை படைத்துள்ள அதேநேரம் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் அளவிடமுடியாத பாரிய முன்னேற்றம் கண்டுள்ளமை மேலும் இப்பாடசாலைக்கு சிறப்புச் சேர்க்கின்றது. அகில இலங்கை தமிழ் தின போட்டிகளில் தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் 2ம் மற்றும் 3ம் இடங்களை பெற்று சாதனைகளை படைத்துள்ளனர். புலமைப் பரிசில் பரீட்சைஇ விஞ்ஞானம்இ சமூகவியல்இ சமயம்இ கணிதம்இ ஆங்கிலம் மற்றும் மனையியல் பாடங்களில் கோட்டம்இ வலயம்இ மாகாணம் மற்றும் அகில இலங்கை ரீதியாக சென்று பல வெற்றிகளையூம் பதிவூ செய்துள்ளார்கள்.

தொடர்ந்து இப்பாடசாலையில் அன்றுவரை இருந்த கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டு 2012ம் ஆண்டு ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பிரிவூஇ இரண்டாம் நிலை என இரு நிர்வாக பிரிவூகளின் கீழ் தற்போது இயங்கிவருகிறது. ஆரம்பப்பிரிவின் முதல் அதிபராக திருமதி. சங்கீதா அதிபரை தொடர்ந்து வி கோபால்ராஜ் தற்போது அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

20180412_110108 20180412_111833 20180412_122342 20180412_173341

இவரின் தலைமையில் அண்மைய புலமைப் பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளுக்கு மேல் பெற்று பெரும் சாதனைப் படைத்துள்ளமை இத்தாய் பாடசாலைக்கு கௌரவத்தை தந்துள்ளது. மேலும் புதிதாக அறிமுகப்படுத்தியூள்ள செயற்பட்டு மகிழ்வோம் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் 2 வருட காலமாக அகில இலங்கை வரை சென்று சாதனைப் படைத்துள்ளமையூம் குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையில் பாரிய வளப்பற்றாக்குறையின் கீழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் போக்குவரத்துஇ விடுதி வசதியின்மை போன்ற பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தாலும் அதனையூம் தாண்டி இம்மாணவர்களின் கற்றல்இ இணைப்பாடவிதானம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தியாக மனப்பான்மையூடன் வழங்கிய சேவைகள் சோதனைகளையூம் தாண்டி பல சாதனைகள் படைக்கும் திறனை இம்மாணவர்களுக்குள் வளர்த்துள்ளனர் என்பது யதார்த்தமாகும்.

இவ்வாறு சாதித்தஇ சாதிக்கத்துடிக்கும் மாணவர்களுள் இப்பாடசாலையில் (1970 1976) கல்வி பயின்ற திருப்பதியாப்பிள்ளை இராமநாதன் இப்பாடசாலையின் பழைய மாணவராவார். தனது கடின உழைப்பால் தலைநகருக்கு புலம்பெயர்ந்து சென்று படிப்படியாக முன்னேறி வியாபார ஸ்தாபனத்தினை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்நிலைக்கு வந்தார். தான் பிறந்த தாய் மண்ணுக்கும் தனது கல்விக்கண்னைத் திறந்த தாய் பாடசாலைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற என்னத்துடன்
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்வினை வருடாந்தம் பாடசாலையில் அதிபரின் அனுமதியோடு தனது சொந்தப்பணத்தில் நடாத்த தீர்மானித்ததற்கிணங்க கல்வியால் சிகரம் தொடுவோம் என்ற தலைப்பில் அதிபரின் தலைமையில் கடந்த வாரம் விருது வழங்கும் வைபவம் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக மத்தியமாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதைபாண்டி ராமேஸ்வரன் சக்தி எப்.எம் சக்தி தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளர் ராஜேந்திரன் கோகுல்நாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியமை விசேட அமுசமாகும்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here