நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருக்கின்ற லாப்கேஸ் எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்றைய டோக்கன்கள் வழங்கி இன்றைய தினம் லாப்கேஸ் மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வருகின்றது
பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.
இரு மாதங்களுக்கு மேலாக லாப்கேஸ் எரிவாயு வழங்கப்படாத நிலையில் நுவரெலியா மின்சார சபை கட்டிடத்திற்கு முன்பாக இன்று இரண்டாவது முறையாக வினியோகம் இடம்பெற்றது.
லாப்கேஸ் எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 1200 சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியா, பொரலாந்த , கந்தபளை ,மாகஸ்தோட்டம் , நானுஒயா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொது மக்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.
டி.சந்ரு செ.திவாகரன்