நுவரெலியாவில் பொலிஸ் பாதுகாப்புடன் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம்

0
122

நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை (22) திகதி நுவரெலியா பிரதான நகரிலும் , களஞ்சிய சாலையிலும் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் பொது மக்களுக்கு சீராக வழங்கப்பட்டது
லிட்ரோ எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 500 இற்கும் அதிகமான சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியா , பொரலாந்த , ஹாவஎலிய, பிலக்பூல்,ஸ்கிராப், பம்பரகலை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது

எரிவாயுக் கொள்வனவு செய்ய அதிகமான பொதுமக்கள் வருகை தந்த நிலையில் நுவரெலியா பொலிஸாரின் பாதுகாப்புடன் எரிவாயு வினியோகம் இடம் பெற்றது.
இந்த எரிவாயுக் கொள்வனவில் ஆண்கள், பெண்கள் என ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியில் இருந்து வருகை தந்து காத்திருந்து 8 மணியளவில் பெற்றுச் சென்றதைக்காண முடிந்ததுடன், பல தனியார் துறைகளில் வேலை செய்பவர் விடுமுறை பெற்று வந்து சிலிண்டர்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

இதில் அதிகமாக நுவரெலியா பிரதான நகரில் ஹோட்டல் உரிமையாளர்களின் நலன் கருதி தெரிவு செய்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here