நுவரெலியாவில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேர்தல் பிரசாரக் கூட்டம்!!

0
120

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் “தாமரை மொட்டு” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் 03.02.2018 அன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நுவரெலியா நகரில் இடம்பெற்றது.ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இக் கூட்டத்தில் முன்னால் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ், முன்னால் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க மற்றும் முன்னால் நுவரெலியா மாநகர சபை முதல்வரும் வேட்பாளருமான மஹிந்த தொடங்பேகமகே, மலையக தேசிய முன்னணி தலைவர் ரிஷி செந்தில்ராஜ் உள்ளிட்ட ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

DSC01729 DSC01705

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here