நுவரெலியா, ருவன்எலிய சிகரட் முகவர் வியாபார நிலையத்தின் ஒருகோடி நாற்பத்துஐந்து லட்சம் ரூபாய் நுவரெலியா தனியார் வங்கியில் வைப்பிலிட 02.01.2018ம் திகதி காலை 8.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது நுவரெலிய பூங்கா வீதியில் பச்சை நிற முச்சக்கரவண்டியில் இருவர் வந்து வழிமறித்து மிளகாய் தூள் வீசி பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
மேலும் வண்டியில் பாதுகாப்பு சேப்பு இருந்தபோதும் அதில் பணம் வைத்திருக்கப்படவில்லை. வண்டியில் சாரதியும், காசாளருமே பயணம் செய்திருந்தனர்.
இக்கொள்ளை தொடர்பான விசாரணைகள் நுவரெலியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
டீ. சந்ரு.