நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுர பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் நான் பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் (22) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பிரேக் இல்லாமல் இயந்திர செயற்பாட்டினை நிறுத்தி விட்டு (நடுநிலை ) யில் முச்சக்கர வண்டியினை செலுத்தியதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் உள்ள மண் மேட்டில் மோதுண்டதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியும் தந்தை ,தாய் மற்றும் சகோதரி எனவும் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்
நுவரெலியா சாந்திபுர வீதியில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .இதனால் இவ் வீதியில் (நடுநிலை)யில் வாகனங்களை செலுத்த வேண்டாம் என நுவரெலியா பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கடுமையாக அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டி.சந்ரு செ.திவாகரன்