நுவரெலியாவில் முட்டைக்கு தட்டுப்பாடு

0
151

மலையகத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக முட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நுவரெலியா, கந்தப்பளை, ராகலை மற்றும் உடபுஸ்ஸல்லாவ ஆகிய நான்கு நகரங்களில் இவ்வாறு முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், வெதுப்பகங்கள், ஹோட்டல் உணவு தயாரிப்புகளில் பாரிய சிரமங்கள் தோன்றியுள்ளன.

குறித்த நகரங்களில் ஒரு சில வியாபார நிலையங்களில் வெள்ளை நிற முட்டை 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை முட்டை விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுவரெலிய மாவட்ட அதிகார சபைக்கு அறிவித்த போதிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here