நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் புதன்கிழமை (25) மாலை முச்சக்கரவண்டியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வியாழக்கிழமை (26) காலை உயிரிழந்துள்ளார் .
நுவரெலியா, கலுகெல பகுதியை சேர்ந்த 29 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.