நுவரெலியா பதுளை பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலிய பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலிய கெக்கிராவ பகுதியிலே 16.02.2018 மாலை 3 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து கட்டுமான பகுதிக்கு சென்ற கனரக வாகனத்துடன் நுவரெலியாவிற்கு வந்த முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதுண்டே விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தினால் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை தொடர்வதாக நுவரெலிய பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்