நுவரெலியா வைத்தியசாலையின் விசேட வைத்தியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி கட்டிட தொகுதி ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்ட இந்த நான்கு மாடி கட்டிட தொகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய 20 அறைகளை கொண்டுள்ளது.
அதன்பின் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிட தொகுதியையும் மேற்பார்வையிட்டார்.
இதன்போது கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
டி சந்ரு