நுவரெலியாவில் 75 குடும்பங்களுக்கு போஷாக்கு உணவுகளை வழங்கினார்; ஆர். ராஜாராம்!

0
109

போஷாக்கு பொருட்கள் மக்களுக்கு வழங்குவதால் அரசியல் இலாபத்திற்காக செய்வேன் என்ற கண்ணோட்டத்தில் என்னைப் பார்க்காதீர்கள் என்கிறார் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். ராஜாராம்.

IMG_9656

05.09.2017 அன்று நுவரெலியா செயலகத்தின் கல்வி இராஜாங்க அமைச்சர் காரியாலயத்தில் 75 குடும்பங்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் நிகழ்வின்போது இவ்வாறு கூறினார். மேலும் உரையாற்றிய இவர் மலையத்தில் இன்னும் வறுமைக் கோட்டிற்கு கீழே இம்மக்கள் வாழ்வதையிட்டு மனதிற்கு மிகவும் கவலையாக இருக்கின்றது. பலமான அரசியல்வாதிகளை உருவாக்கும் சக்தியாக விளங்கும் இம்மக்கள் நுவரெலியாவில்தான் இருக்கிறார்கள். எனது நண்பர் பாஸ்டர் குமார மெண்டிஸ் அவரின் சொந்த செலவில் இவ்வாறு போஷாக்கு உணவுப் பொருட்கள் இன்றும் மக்களுக்கு வழங்கினார் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மேல்மாகாண சபை உறுப்பினர் லலந்த குணசேகர, பாஸ்டர் குமார மென்டிஸ், ஆசிரியர் சங்க செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டீ. சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here