நுவரெலியா உடபுஸ்ஸலாவ பாதையில் சமர்ஹில் தோட்டத்திற்கு சொந்தமான முகாமையாளர் விடுதியில் வளர்ந்திருந்த பாரிய சைப்பிரஸ் மரம் ஒன்று பாதையில் விழுந்துள்ளதால் சில மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டது. இருப்பினும் மரம் வெட்டிஅப்புறப்படுத்தப்பட்டதன் பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் அங்கு பிரதான மின்கம்பத்தில் சேதம் ஏற்பட்டுள்ளமையால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா பிரதேசத்தின் பல பகுதிகளில் இந்த தாக்கத்தை காணக்கூடியதாயுள்ளது. இன்னும் விழும் நிலையில் அப்பகுதியில் பல மரங்கள் கானப்படுவதால் அவற்றையும் வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுவரெலியா பிரதேசத்தில் தற்போது கடுமையா காற்று நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
யோகநாகன்