நுவரெலியா மாவட்டம் உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் ராகலை புருக்சைட் பகுதியில் காணப்படும் புகைரத நிலையத்திற்கு சொந்தமான பழமையான விடுதியினை தனியார் ஒருவருக்கு வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மதகுரு என பலர் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இடம் ஆரம்பத்தில் சேவையிலிருந்த புகைரதநிலைய விடுதி எனவும் அந்த பகுதிக்கு செல்லும் புகையிர சேவை 1948 ஆம் காலப்பகுதிக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்டாலும் குறித்த விடுதி பவனையற்ற இடமாகவே காணப்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில் கடந்த காலங்களில் இந்த இடத்தை பாடசாலை காரியாலயம், கிராம உத்தியோகத்தர் காரியாலயம், அறநெறி பாடசாலை, மற்றும் ஏனைய பொது சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுகோள் விடுத்து வழங்காத அதிகாரிகள் தற்போது தனி ஒருவருக்கு வழங்கியமையினாலேயே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் குறித்த விடுதியில் மதுபான சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதனை தடுத்து பொது வேலைகளுக்கு பயன்படுத்த ஆவணம் செய்யுமாறு குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக செயலாளரும் முன்னாள் வலப்பனை பிரதேச சபை உறுப்பினருமான தமிழ்மாறன் ஜனார்த்தனும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்