நுவரெலியா மாவட்டம் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்திக்கும், நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தவிசாளரும், முன்னாள் எம்.பியுமான இராஜதுரை மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் ஆகியோரின் ஏற்பாட்டில் நேற்று நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்தோடு, பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்துக்கொண்டதோடு, இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்தார்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட எம்.பியுமான எம்.ராமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், இ.தொ.காவின் காரியாலய உத்தியோகஸ்தர்கள், பிரதேச அமைப்பாளர்கள், தலைவர், தலைவிகள், பொதுமக்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
டி சந்ரு