பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை நிந்தித்து, அச்சுறுத்தியமையைக் கண்டித்து மலையக ஆசிரியர் முன்னணி,ஆசிரியர் விடுதலை முன்னணி,இலங்கை ஆசிரியர் சங்கம்,இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை தமிழ் ஐக்கிய ஆசிரியர்சங்கம் ஆகிய ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து 6.2.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நுவரெலியா தபாற்கந்தோர் முன்பாக நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 ற்கு மேற்ப்பட்ட ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
இதன்போது ஆசிரியர் சமூகத்தையும் கல்வி சமூகத்தையும் பெண் சமூகத்தையும் கீழ்தரமாக அவமானப்படுத்திய முதலமைச்சர்,மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,மாகாண கல்விப் பணிப்பாளர்,வலய கல்வி பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக பதவி நீக்க கோரியும் அவர்களுக்கு உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை பி.கேதீஸ், ஷான் சதீஸ்