நுவரெலியா-பஸ் இன்றி மக்கள் அவதியுற்ற மக்கள்

0
118

கடந்த திங்கட்கிழமை நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வந்தது, இந் நிலையில் நுவரெலியாவில் அதிகமான அரச , தனியார் பஸ்கள் சேவைகள் இடம்பெறவில்லை , எரிபொருள் விலையுர்வு காரணமாகவும் சில தனியார் பஸ் உரிமையாளர்களும் சேவையில் ஈடுபடவில்லை ,நுவரெலியாவில் இருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் பஸ்கள் முழுமையாக சேவையில் ஈடுபடாத நிலையில் பயணிகள் மற்றும் நுவரெலியா பிரதான நகருக்கு அன்றாட கூலிக்கு தொழில் நிமிர்த்தம் வருபவர்கள் என பலர் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் .

எனினும் எரிபொருள் விநியோகத்தில் தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , வழக்கம் போல் பஸ் சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here