நுவரெலியா கண்டி பிரதான வீதி மற்றும் நானுஓயா குறுக்கு பாதைகளில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் பெற்று கொடுக்க வலியுறுத்தப்பட்டது. நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (28:08:2017)இன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான திலகராஜா மயில்வாகனம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது இது சம்பந்தமாக விவாதிக்கப்பட்ட போதே இதற்கான முடிவு எட்டப்பட்டது.
இதன் இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி. சத்திவேல் கே. பியதாஸ ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. பிரதானமாக நுவரெலியா கண்டி மற்றும் நானுஓயா குறுக்கு பாதையில் மேற்கொள்ளப்படும் மரக்கறி வியாபாரிகளுக்கு நிரந்தர இடவசதிகளை ஏற்படுத்தி கொடுக்க ஆவன செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜா மயில்வாகனம் அவர்கள் கூறினர்.
டி, சந்ரு